இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு

Sri Lanka Army Lankasri Sri Lanka Parliament Ranil Wickremesinghe Sri Lanka Navy
By Nithusan Aug 19, 2023 12:33 PM GMT
Report

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்யவுள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதிபர் தெரிவித்தார்.

நேற்று மாலை பூஸ்ஸ கடற்படை உயர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற சிறிலங்கா கடற்படையின் தொண்டர் படையணிக்கு அதிபர் வர்ணம் சூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய சவால்களை ஆயுதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது என்றும் கூறினார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் ,

பாதுகாப்புப் படையினரின் நலன் மற்றும் ஓய்வுக்காலத்தைப் பாதுகாப்பதில் சிறிலங்கா அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளது.

 இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம்

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு | A Review Of The Country S National Security

புதிய தேசிய பாதுகாப்பு மீளாய்வில் இதனை நான் உள்ளடக்க எதிர்பார்க்கின்றேன். உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதையான இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைந்துள்ளமையினால் இலங்கை ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.

அதிகாரப் போட்டி மற்றும் பக்கசார்பு இன்றி நாம் முன்னேற வேண்டும் இதனால் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பல நாடுகள் உள்நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.இந்த வகையில் இலங்கையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சில உள்நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிட்டது. எனவே இதற்கு நாமும் தயாராக வேண்டும்.

மீளாய்வின் அவசியம் 

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு | A Review Of The Country S National Security

எமது நாட்டின் எதிர்கால தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய நான் எதிர்பார்க்கிறேன். ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மீளாய்வை செய்து வருகின்றன.

நாட்டிற்கு எத்தகைய அச்சுறுத்தல்கள் உள்ளன? நாட்டின் வளங்கள் என்ன?அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்கள் மீளாய்வு நடத்துகின்றனர். அதற்கேற்ப அவர்களது இராணுவ பலத்தையும் பொருளாதார பலத்தையும் ஒப்பிட்டு பார்த்து தீர்க்கமான முடிவுகள் பல எடுக்கப்பட்டு வருகின்றன.

நாமும் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

நவீன பாதுகாப்பு கொள்கை

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு | A Review Of The Country S National Security

இன்று, டோனர் போன்ற பல நவீன தொழில்நுட்ப சாதனங்கள் சந்தையில் உள்ளன.

இந்து சமுத்திரத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே நமது கடல் பாதுகாப்புக்காக நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் துரித வளர்ச்சியை எட்ட முடிந்தால், அதற்குத் தேவையான பணத்தை எம்மால் செலவிட முடியும். ஆகவே தான் , தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய எதிர்பார்க்கிறேன்.

புதிய பொருளாதாரப் போக்குகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்தி இந்த மீளாய்வு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். அறிக்கை கிடைத்த பிறகு, தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை தயாரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

Defense 2030

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு | A Review Of The Country S National Security

“Defense 2030” எனும் இந்த அறிக்கையை தயாரிக்க சிறிலங்கா இராணுவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சன்ன குணதிலக்கவின் தலைமையில் மீளாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனியான அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025