பாடசாலை மாணவர்களுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க அதிபர் ரணில் தீர்மானித்துள்ளார்.
இலங்கையிலுள்ள 10,126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான 100,000 பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, இந்த முழு வேலைத்திட்டத்திற்கும் அதிபர் நிதியத்திலிருந்து 3,600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் வழங்குவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதன்படி, இந்த புலமைப்பரிசில் பெறுவோரை தெரிவு செய்யும் நடவடிக்கை மற்றும் அது தொடர்பான அனைத்து தகவல்களும் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |