தனியான நீதிமன்றத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை..!
Ranjith Siyambalapitiya
Income Tax Department
By Pakirathan
வரிகள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கு தனியான நீதிமன்றம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், இதனை நிறுவுவதற்கான முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பிரத்தியேகமான நீதிமன்றம் இல்லாத காரணத்தால் வரி தொடர்பான விவகாரங்களை விசாரணை செய்வதற்கு பெரும் தாமதம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனியான நீதிமன்றம்
இதேவேளை, தற்போதைய வரி அறவீட்டில் நிலவும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை நீக்கி வரி செலுத்துதலை முறைப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
வரி செலுத்தும் முறைமையை சிறப்பாக செயல்படுத்த RAMIS திட்டத்தின் மூலம் மின் மற்றும் இலத்திரனியல் முறை பயன்படுத்தப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி