இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி
இலங்கையில் குறிப்பாக தென் மாகாணத்தில் பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் துப்பாக்கிச் சூடு
ஐரோப்பா போன்ற நாடுகளில் மக்கள் அமைதியான சூழலில் வாழ விரும்புகின்ற போது, இலங்கையில் துப்பாக்கிச் சூடு சத்தத்தை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குற்றச் செயல்களால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
பெந்தர, அஹூங்கல்ல, கொஸ்கொட, ரத்கம, ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாட்டில் அமைதியற்ற சூழல் ஏற்படுமானால் அது சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதும் மிகவும் அவசியம். இதனால் சுற்றுலாத்துறை தொடர்பான பல்வேறு செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |