உலக சந்தையில் தங்க விலையில் சடுதியான வீழ்ச்சி
உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்றைய (31.01.2026) நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது நேற்றைய தினத்துடன் (30) ஒப்பிடுகையில் 434.45 அமெரிக்க டொலர் வீழ்ச்சி எனவும் சதவீத அடிப்படையில் 8.15 வீத வீழ்ச்சி எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலை
வெள்ளி விலைகளும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இன்று ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 85.34 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இது முந்தைய தினத்துடன் ஒப்பிடுகையில் 29.16 அமெரிக்க டொலர் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் சதவீத அடிப்படையில் இது 25.46 வீதம் ஆகும்.
இதற்கமைய, கடந்த 48 மணித்தியாலங்களில் தங்கம் மற்றும் வெள்ளிச் சந்தையிலிருந்து சுமார் 15 டிரில்லியன் டொலர்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச வணிகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |