சாதகமான சமிக்ஞைகள் இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை இரத்து - அரசுக்கு காலக்கெடு
காலக்கெடு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, நில அபகரிப்பு தொடர்பில் சாதகமான சமிக்ஞைகள் இல்லாவிட்டால் அரசுடன் பேச்சு வார்த்தையை தொடர முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு காலக்கெடு விதித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் உள்ளிட்ட உடனடியான பிரச்சினைகள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காவிட்டால் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதில் எவ்வித பயனும் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு
அத்துடன் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக அரசாங்கத்திடம் இருந்து சாதகமான சமிக்கைகளை வெளிப்பட வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளது.
தற்போதைய அரசியலமைப்பில் உள்ள அதிகார பகிர்வு விடயங்களை முன்னெடுப்பது தொடர்பான திட்ட முன்வரைவு நிரந்தரமான அரசியல் தீர்வு விடயத்திலும் அதிகாரங்கள் பகிரப்படும் அதற்கான திட்ட முன்மொழிவுகளை தனியாக கையளிப்பதற்கும் தீர்மானித்துள்ளது
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
