பேருந்தில் அழைத்துவரப்பட்ட கைதி தப்பியோட்டம்
கல்கமுவ நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதை அடுத்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரே தப்பிச் சென்றவராவார்.
மனைவியும் கணவனும் கைது
இந்தச்சம்பவம் தொடர்பில் அவரும் அவரது மனைவியும் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக
வாரியபொல விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தம்பதியினர் இன்று கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதன்போது நீதிமன்ற வளாகத்திற்குள் பேருந்து நுழைந்ததும் சந்தேக நபர் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். சந்தேக நபரைக் கண்டுபிடிக்க கல்கமுவ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்