பதின்ம வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு : சிக்கினார் இளைஞர்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த மாணவி ஒருவரை கடத்திச் சென்று வன்புணர்விற்கு உட்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நவகத்தேகம - வெலேவெவ பிரதேசத்தை சேர்ந்த 14 வயது 06 மாதமும் ஆன பாடசாலை மாணவியே கடத்தப்பட்டவராவார்.
சந்தேகநபர் கைது
தலுவெல வஹரக பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவரே மாணவியை கடத்தியவராவார்.

கடத்தல் சம்பவம் தொடர்பில் காவல்துறையில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
மாணவி மருத்துவ பரிசோதனைக்காக
வன்புணர்விற்கு உள்ளானதாக கூறப்படும் மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |