கண்களை கட்டிக் கொண்டு கின்னஸ் சாதனை படைத்த பத்து வயது தமிழ் சிறுமி
பத்து வயது சிறுமி தன்னுடைய இரண்டு கண்களையும் முழுமையாக கட்டிக்கொண்டு செஸ் காய்களை எந்தவித தவறும் இன்றி சரியாக செஸ் போர்டில் 45.72 நொடிகளில் அடுக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இதன்மூலம் கண்களைக் கட்டிக் கொண்டே அதிவேகமாக செஸ் போர்டை செட் செய்தவர் என்பதற்கான உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
படிக்கும் பாடசாலையிலேயே உலக சாதனை
மலேசியாவை சேர்ந்த புனிதமலர் ராஜசேகர் என்ற பெயர் கொண்ட சிறுமியே இவ்வாறு உலக சாதனை படைத்தவராவார்.

அச்சிறுமி படிக்கும் பாடசாலையிலேயே இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் இந்த சாதனையை நிகழ்த்தும் போது அச்சிறுமியின் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் அச்சிறுமியின் ஆசிரியர்கள் என அனைவரும் கூடியிருந்து சிறுமியை ஊக்கப்படுத்தி உள்ளனர்.
தந்தையுடன் சேர்ந்து தினசரி
இதைப் பற்றி பேசிய புனிதமலர், தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து தினசரி இருவரும் செஸ் விளையாடுவார் என்று கூறினார் . மேலும் இந்த உலக சாதனை செய்தது தன்னுடைய வாழ்வில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருமை வாய்ந்த தனித்துவமிக்க சாதனையை புரிந்ததன் மூலம் மற்றவர்களும் தன்னைக் கண்டு ஊக்கம் அடைவார்கள் எனவும், அவர்களும் தனக்கென ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதை அடைய கடுமையாக முயற்சி செய்வார்கள் எனவும் நம்புவதாக சிறுமி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்