இன்று இரவு இடம்பெற்ற விபத்து - இருவர் படுகாயம்
Puttalam
Sri Lanka Police Investigation
By Sumithiran
புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற பயங்கர விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோதியதில் அந்த வாகனங்களின் சாரதிகள் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. ஆனமடுவ பரமகந்த சந்திக்கு அருகில் இந்த விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்டவேளை

வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்ட பாரவூர்தி எதிர்திசையில் வந்த பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தின் பின்னர் பிரதேசவாசிகள் பாரவூர்திகளில் சிக்கி படுகாயமடைந்த சாரதிகளை மீட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.