வட்டவளையில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் காயம்
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
Accident
By Dharu
கம்பளையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வட்டவளை பகுதியில் வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டியில் காயமடைந்த குழந்தைகளின் தந்தை, தாய் மற்றும் நான்கு மற்றும் இரண்டு வயதுடைய குழந்தைகள் பயணித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாயும் இரண்டு குழந்தைகளும்
இதன்படி விபத்தில் தாயும் இரண்டு குழந்தைகளும் காயமடைந்து வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதற்கட்ட விசாரணைகளின்படி, வளைந்த வீதி மற்றும் அதிக வேகம் காரணமாக சாரதி முச்சக்கர வண்டியின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி