நிலத்துக்கடியில் புதைக்கப்பட்ட போதைப்பொருள் இரசாயன கொள்கலன்கள்! விசாரணையில் அதிர்ச்சி
இந்த நாட்டில் போதைப்பொருள் ஐஸ் தயாரிப்பதற்குத் தேவையான இரசாயனங்கள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கொள்கலன்கள் மித்தெனிய - தலாவ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேற்கு வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழு மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த இரண்டு கொள்கலன்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த இரசாயனப் பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்டெடுப்பது தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
புதைக்கபட்ட நிலம்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெகோ சமன் என்பவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த இரசாயனப் பொருள் அடங்கிய கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ரசாயனக் குவியல்கள் அடங்கிய கொள்கலன்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலத்தின் புகைப்படங்கள் கீழே உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
