துருக்கி நிலநடுக்க துயரம் -தொப்புள்கொடி அறுபடாத நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை
Turkey
Turkey Earthquake
By Sumithiran
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் தொகை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. மீட்புபணிகளும் தொடர்ந்த வண்ணமுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கடந்த நிலையிலும் தற்போதும் இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிருடன் மீட்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
குடும்பத்தில் எவரும் உயிருடனில்லை

அந்த வகையில் பிறந்து 3 நாட்களுக்குப் பின்னர், தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில், பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையை பெற்றெடுத்த தாய் நிலநடுக்கத்தில் உயிரிழந்துவிட்ட நிலையில், தாய் முகத்தை மட்டுமல்ல அந்த குடும்பத்தின் ஒருவரையும் கூட அந்த குழந்தை இனி அறிய வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது. காரணம் அந்த குடும்பத்தில் உயிரோடு மிஞ்சியது அந்த குழந்தை மட்டும்தான்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி