ட்ரம்புடன் கருத்து வேறுபாடு! நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஈரான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னுடன் கருத்து வேறுபாடுகளை கொண்டுள்ளதாக வெளியான கூற்றுக்களை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில் கருத்து வெளியிட்ட அவர், ஈரான் விவகாரம் தொடர்பில் இருவரும் ஒரே இலக்கை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, ட்ரம்பை சந்திப்பதற்காக அடுத்த திங்கட்கிழமையே அமெரிக்காவுக்கு பயணம் செய்ய எதிர்பார்த்துள்ள நெதன்யாகு, அணு ஆயுதங்கள் இல்லாத ஈரான் என்ற ஒரே இலக்கை இருவருமே பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மிகச் சிறந்த நட்பு நாடு
இவ்வாறானதொரு பின்னணியில், 60 நாள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒரு நீண்ட கால போர்நிறுத்த ஒப்பந்தமாக மாற்றுவதற்கான முயற்சியில் ட்ரம்ப் ஈரானுடன் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறார், அதே நேரத்தில் நெதன்யாகு ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கத் தயாராக இருக்கிறார்.

இதேவேளை, ஈரானிய முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு குறித்துப் பேசிய அவர், அங்கு அவர்கள் அமெரிக்காவுக்கு மரணம் என்று மட்டும் கோஷமிடவில்லை, ட்ரம்பைக் கொல்லுங்கள் என்றும் கோஷமிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இத்தகைய கோஷங்களை இஸ்ரேலில் கேட்க முடியாது என்று தெரிவித்த நெதன்யாகு அமெரிக்காவிற்கு உலகில் எங்குமே இல்லாத மிகச் சிறந்த நட்பு நாடு இஸ்ரேல் மட்டும்தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |