லண்டனில் சிறப்புற நடைபெற்ற “தேச அபிமானி” ஆனந்தியின் வணக்க நிகழ்வு !
லண்டன் ஹரோவில், BBC ஊடகவியலாளர் “தேச அபிமானி” ஆனந்தியின் வணக்க நிகழ்வுகள் இனிதாக நடைபெற்றது.
இந்தியா ருடே நிருபர்கள், லண்டனை தளமாக கொண்டு இயங்கும், டெயிலி மெயில் பத்திரிகை நிருபர்கள், புதியதலைமுறை தொலைக்காட்சி நிருபர்கள் என பல்லின ஊடகவியலாளர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தார்கள்.
ஆனந்தியைப் பற்றி பல அரிய தகவல்
முழுமையாக துறை சார் வல்லுனர்கள் , கலந்துகொண்ட இந் நிகழ்வில் பேசிய பலரும், தேச அபிமானி ஆனந்தியைப் பற்றி பல அரிய தகவல்களை வெளியிட்டார்கள்.
நாடு கடந்த அரசின், பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களின் இரங்கல் செய்தியும் வாசிக்கப்பட்டது. மேலும் லேபருக்கான தமிழர் அமைப்பு, கொன்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களும் இதில் கலந்துகொண்டதோடு. முன்னாள் ஹரோ மேயர் சுரேஷ் கிருஷ்ணாவும் கலந்துகொண்டு சிறப்பு உரை ஆற்றி இருந்தார்.
இதேவேளை ஹரோ மேயர் , 1970 களில் BBC வானொலி எப்படி செயல்பட்டது என்பது தொடர்பாக அரிய தகவல்களை வெளியிட்டும் இருந்தார்.
எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு அனுசரணை
கணா சொலிசிட்டர் அவர்களும் சிறப்புரை ஆற்றி இருந்தார். தங்கக் குரல் குணா நிகழ்ச்சியை நெறிப்படுத்த , அவருடன் GTV தினேஷ் நிகழ்வுக்கு தலைமை தாங்கி இருந்தார்.
பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பின் அனுசரணையோடு இந் நிகழ்வு இடம்பெற்று இருந்தது. இந்த அமைப்பில் 189 ஊடகவியலாளர்கள் உலக ரீதியாக அங்கத்தும் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 23 மணி நேரம் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்