காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய ஐ.நாவின் தீர்மானம் : தடை செய்த அமெரிக்கா

United Nations United States of America Israel Israel-Hamas War Gaza
By Sathangani Dec 10, 2023 08:47 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

காசாவில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் வரைவுத் தீா்மானத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா தடை செய்துள்ளது.

குறித்த வரைவுத் தீா்மானத்தில், பொதுமக்கள் மீதான ஹமாஸ் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்கப்படவில்லை என்பதாலும், இத்தகைய தீா்மானத்தால் காசா நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதாலும் அதை தடை செய்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை வீசியும், அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான் வழியாக ஊடுருவியும் ஹமாஸ் அமைப்பினா் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி நடத்திய தாக்குதலில் சுமாா் 1,200 போ் உயிரிழந்ததுடன்,  இஸ்ரேலில் இருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினா் கடத்திச் சென்றனா்.

கால்நடை உரிமையாளர் யானை தாக்குதலில் உயிரிழப்பு

கால்நடை உரிமையாளர் யானை தாக்குதலில் உயிரிழப்பு


மால்டா நாட்டின் தீர்மானம் 

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் கடுமையான குண்டுவீச்சு நடத்தி வருகிறது. அந்தப் பகுதிக்குள் நுழைந்தும் இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதில் இதுவரை 17,487 போ் உயிரிழந்துள்ளனா்; அவா்களில் பெரும்பாலானவா்கள் சிறுவா்கள் மற்றும் பெண்கள்.

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய ஐ.நாவின் தீர்மானம் : தடை செய்த அமெரிக்கா | A Un Resolution Calling For A Ceasefire In Gaza

இதற்கிடையே, காசாவில் பொதுமக்களின் அதீத உயிரிழப்பைத் தடுத்து நிறுத்தவும், தொடா் முற்றுகையால் தடைபட்டுள்ள அத்தியாவசிய மற்றும் நிவாரணப் பொருட்களை அவா்களிடம் கொண்டுசோ்க்கவும் அங்கு போா் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீா்மானம் நிறைவேற்ற நான்கு முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

மால்டா நாட்டால் கொண்டுவரப்பட்ட அத்தகைய ஒரு தீா்மானம் மட்டுமே கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலில், கத்தாா், எகிப்து முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு காசாவில் கடந்த மாதம் 24 முதல் 30ஆம் திகதி வரை போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இஸ்ரேலில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பலஸ்தீன கைதிகள் சிலரை இஸ்ரேலும் விடுவித்தன.

அந்தப் போா் நிறுத்தத்தை மேலும் நீடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, காசாவில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் கடந்த 1ஆம் திகதி முதல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலுக்கு வந்து குவியப்போகும் ஆயிரக்கணக்கான அமெரிக்க டாங்கிகள்

இஸ்ரேலுக்கு வந்து குவியப்போகும் ஆயிரக்கணக்கான அமெரிக்க டாங்கிகள்


போர் நிறுத்த வரைவுத் தீர்மானம் 

இந்த நிலையில், காசா போா் விபரீத கட்டத்தை அடைந்துள்ளதாகவும், இனியும் அங்கு போா் நீடித்தால் மிகப் பெரிய மனிதப் பேரழிவு ஏற்படும் என்றும் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அறிவித்தாா்.

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய ஐ.நாவின் தீர்மானம் : தடை செய்த அமெரிக்கா | A Un Resolution Calling For A Ceasefire In Gaza

காசாவில் உடனடியாகப் போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய அவா், ஐ.நா. பாதுகாப்பு சபையில் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுவருவதற்காக மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்படும் ஐ.நா.வின் 99ஆவது சட்டப் பிரிவைக் கையிலெடுத்தாா்.

அதைத் தொடா்ந்து, காசாவில் உடனடி போா் நிறுத்தம் கொண்டு வருவதை வலியுறுத்தும் வரைவுத் தீா்மானத்தை பாதுகாப்பு சபையில் ஐக்கிய அரபு அமீரகம் கடந்த வெள்ளிக்கிழமை (08) தாக்கல் செய்தது.

15 உறுப்பினா்களைக் கொண்ட அந்த சபையில் அந்த வரைவுத் தீா்மானத்துக்கு 13 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா். எனினும், அந்த வரைவில் ஹமாஸ் அமைப்பினரின் ஒக்டோபர் 09 தாக்குதல் குறித்து குறிப்பிடப்படாததால் வாக்களிப்பைப் புறக்கணிப்பதாக பிரிட்டன் அறிவித்தது.

இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்ற தீர்மானம் ஏற்புடையதல்ல : கலிலூர் ரஹ்மான்

இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்ற தீர்மானம் ஏற்புடையதல்ல : கலிலூர் ரஹ்மான்


அமெரிக்காவின் முடிவுக்கு இஸ்ரேல் வரவேற்பு 

இருப்பினும், பெரும்பான்மை ஆதரவுடன் அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கலாம். ஆனால், தனது சிறப்பு ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வரைவுத் தீா்மானத்தை அமெரிக்கா தடை செய்தது.

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய ஐ.நாவின் தீர்மானம் : தடை செய்த அமெரிக்கா | A Un Resolution Calling For A Ceasefire In Gaza

இது குறித்து விளக்கமளித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க துணைத் தூதா் ராபா் வுட் கூறகையில் ஐக்கிய அரபு அமீரகம் தற்போது முன்வைத்துள்ள வரைவுத் தீா்மானத்தில் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுக்குள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லை. மேலும், அமெரிக்கா பரிந்துரை செய்த அம்சங்கள் அந்த வரைவுத் தீா்மானத்தில் இடம் பெறவில்லை.

ஏற்கனவே காசாவில் போர் நிறுத்திவைப்பு, கைதிகள் பரிமாற்றம், நிவாரணப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டது ஆகியவற்றுக்கு அந்த அம்சங்கள்தான் வழிவகுத்தன. இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்படுவதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. காசாவில் ஒரு குண்டூசி அளவுக்குக் கூட இது மாற்றத்தை ஏற்படுத்தாது.

எனவே, இந்தத் தீா்மானத்தை அமெரிக்கா ரத்து செய்கிறது என்றாா் அவா். அமெரிக்காவின் இந்த முடிவை இஸ்ரேல் வரவேற்றுள்ளது. எனினும், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இதனைக் கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023