சிறுமியாக மாறி, பாடசாலை மாணவியாக இணைந்த 29 வயது பெண்!
United States of America
Crime
By Pakirathan
29 வயது பெண்ணொருவர் 15 வயது சிறுமி போல் நடித்து பாடசாலையில் நுழைந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி மாநிலத்தின் நியூ புருன்ஸ்விக் நகரிலுள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பாடசாலை ஆசிரியர்களுக்கு அப்பெண்ணின் உண்மை வயது தெரியவந்ததையடுத்து, காவல்துறைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலைக்கு நுழைந்த 29 வயது பெண்

சிறுமியாக பாடசாலைக்கு நுழைவதற்கு குறித்த பெண்ணால் போலி பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பாடசாலைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் நான்கு நாட்கள் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதுடன், பெற்றோர்களின் விபரங்களில் காணப்பட்ட குழப்பத்தினால் அவர் மீது சந்தேகம் எழுந்ததாக பாடசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி