மயானத்திற்கு அருகிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு
அநுராதபுரம் - மதவாச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் நேற்று(09) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மதவாச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் 30 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர் எனவும் அவரது சடலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை விசாரணை
இதேவேளை, குறித்த பெண் மேலாடை மற்றும் லெக்கின்ஸ் ஆகிய ஆடைகளை அணிந்துள்ளதுடன் அவரின் அருகில் இருந்த பையில் கொழும்பில் இருந்து மதவாச்சிக்கு இ.போ.சபை பேரூந்தில் பயணித்த சிட்டை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெண்ணின் உடலில் பல காயங்கள் காணப்பட்டுள்ளமையினால் கொலையென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நீதவானின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுராதபுரம் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மதவாச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |