யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பெண்
Jaffna
Stress
By Sathangani
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவர் நேற்று (02) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை பிறந்து 20 நாட்கள் கடந்துள்ள நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளது.
மன அழுத்தத்தில் தவறான முடிவு
குழந்தை பிறந்து 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் இருந்த அவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்