திடீரென முடங்கிய விராட் கோலியின் instagram கணக்கு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) திடீரென முடக்கப்பட்டுள்ளது.
சுமார் 274 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்ட அவரது பக்கம் காணாமல் போனதால், அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அவரது மனைவி அனுஷ்காவின் இன்ஸ்டாகிராம் கணக்கை டேக் செய்து ரசிகர்கள் காரணத்தை கேட்டு வருகின்றனர்.
இணைப்பு முறிந்துவிட்டது
இன்று அதிகாலை முதல் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தேடிய ரசிகர்களுக்கு, "இந்த பக்கம் கிடைக்கவில்லை" (Profile isn't available) அல்லது "இணைப்பு முறிந்துவிட்டது" (Link may be broken) என்ற செய்திகளே திரையில் தோன்றின.

விராட் கோலி தானாக முன்வந்து தனது கணக்கைச் செயலிழக்கச் செய்தாரா (Deactivate) அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நடந்ததா என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |