யாழில் பரபரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டு சம்பவம்: இளைஞன் படுகாயம்
Jaffna
Nothern Province
Srilankan Tamil News
By Kathirpriya
யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றைய தினம் (08) இரவு 8.30 மணியளவில் வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் திடீரென தாக்குதல்களை நிகழ்த்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞன் மீதே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாண காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்