வெளிநாட்டு கப்பலில் வேலைக்கு சென்ற இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
வெளிநாடு ஒன்றில் கப்பலில் பணிபுரியச் சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹொரணை, அங்குருவத்தோட்ட உடுவர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சிராத் சந்தரு என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
ஜேர்மன் கப்பல் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலில்
குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஜேர்மன் கப்பல் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலில் பணிபுரியச் சென்றுள்ளார்.பின்னர், அவர் ஸ்பெயினில் உள்ள "சென்டுகா பே" என்ற கப்பலில் சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி கடந்த 18ஆம் திகதி சிராத் சந்தரு கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்ததாக அவரது உடுவரை வீட்டுக்கு வந்த சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்தின் முகாமையாளர்கள் இருவர் தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் முறைப்பாடு
குறித்த இளைஞன் கடந்த 17ஆம் திகதி காலை 10.00 மணியளவில் கடலில் விழுந்ததாகவும், 04 மணித்தியாலங்களின் பின்னரே கப்பலின் கப்டன் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு இது தெரியவந்ததாகவும் வீட்டிற்கு வந்த இருவர் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |