கடலில் மூழ்கி இளம் காவல்துறை உத்தியோகத்தர் பலி
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Dhilak
களுத்துறை, கட்டுகுருந்தே பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்கு பின்புறம் உள்ள கடலில் இரண்டு நண்பர்களுடன் நீராடச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த போது அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய தொடம்கொட வெனிவெல்கெட்டியவத்தையைச் சேர்ந்த ஒலுபத பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய தேஷாஞ்ச தரேந்திரா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |