இலங்கைக்கு கிழக்கே தாழமுக்கம்! வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை
Sri Lanka
Weather
By pavan
வட அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியுமாக நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் வெவ்வேறான காற்று சுழற்சிகள் உருவாகியுள்ளன.
குறித்த இரண்டு காற்று சுழற்சிகளும் தற்போது ஒன்றாக இணைந்து சற்று வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
வடக்கு கிழக்கில் கனமழை
இதன் காரணமாக இன்றுள்ள வானிலை அமைப்பின்படி (26) அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் நாளை (27) முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இது சில நாட்களுக்கு தொடரும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது இடையிடையே ஓரளவு மழை பொழியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 11 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்