புலம்பெயர் நாடொன்றில் வசிப்பவர் என்னை கொல்ல முயல்கிறார்!! இலங்கையில் முறைப்பாடு!!
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒருவர் இலங்கையில் வசித்துவருகின்ற தன்னை கொலைசெய்ய முயற்சிப்பதாக, சிறிலங்காவின் அரசதலைவரிடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காதான்குடியில் வசித்துவருகின்ற நபர் ஒருவரே அந்த முறைப்பாட்டை சிறிலங்காவின் அரசதலைவரிடமும், காவல்துறைமா அதிபரிடமும் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
முன்னர் ஆயுதக் குழு ஒன்றில் செயலாற்றிவந்த ஒரு நபர் தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வருவதாகவும், பிரித்தானியாவில் இருந்து தன்னை கொலைசெய்யமுயற்சிப்பதாகவும், அதற்காக இலங்கையில் உள்ள சில காவல்துறை அதிகாரிகளையும், ஆயுததாரிகளையும் அந்தநபர் பயன்படுத்திவருவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டை மேற்கொண்ட நபரது காத்தான்குடியிலுள்ள வீட்டுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும், பிரித்தானியாவில் வாழ்ந்தபடி இலங்கையில் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற அந்த நபர் மிது இராஜதந்திரத் தொடர்புகளைப் பாவித்து சிறிலங்கா காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரியவருகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
