பாரபட்சமான கொள்கைகளை கைவிடுக -சர்வதேச மன்னிப்புச்சபை கோட்டாபய அரசிடம் வலியுறுத்து

Covid-19 Sri Lanka Channa Jayasumana
By Vasanth Feb 21, 2021 09:18 AM GMT
Report

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கை நியாயமற்றது அவசியமற்றது எனவும் பாரபட்சமான கொள்கைகளை கைவிடுமாறும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சன்ன ஜெயசுமனவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட்கிரிவ்த்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்லாமிய கொள்கைகளின் படி உடல்களை அடக்கம் செய்வது ஒருவரின் இறுதிநிகழ்வில் முக்கியமான விடயம்,உடல்கனை தகனம் செய்வது இஸ்லாமிய மதத்தில் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டாய தகனம் நியாயமற்றது அவசியமற்றது முஸ்லிம்களின் மத உரிமைகளை மீறுவாகும். அரசாங்கத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சுதத்சமரவீர, இறந்தவர்களின் உடல்கள் காரணமாக நிலத்தடி நீர் மாசுபடும் என தெரிவித்துள்ளார்.

எனினும இது உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களிற்கு முரணானது. உலக சுகாதார ஸ்தாபனம் உடல்களை அடக்கம் செய்யலாம், தகனம் செய்யலாம் என தெளிவாக தெரிவித்துள்ளது. இதேவேளை இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், கொவிட் 19க்கு காரணமான வைரஸ் நீரின் மூலம் பரவாது என தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் போன்ற பொதுசுகாதார நிபுணர்களால் வெளியிடப்பட்ட சர்வதேச வழிகாட்டுதல்களிலும்,சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளிலும்( ஜெனீபர்பெரேரா தலைமையிலானது –உடல்களை அடக்கம் செய்யலாம் என தெரிவித்திருந்தது) தங்கியிருக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்.

அரசாங்கத்தை தனிமைப்படுத்தல் சட்டத்திலும் நோய் தடுப்பு கட்டளையிலும் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் உடல்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் அனுமதிக்குமாறும் கொரோனா வைரசினால் இறந்தவர்களாக கருதப்படுபவர்களை தகனம் செய்யும் பாரபட்ச கொள்கையை கைவிடுமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி