எங்கள் வீரர்கள் உங்கள் மீது நரகத்தை மழையாக பொழிவார்கள்:ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த அப்பாஸ் அராக்சி
“நீங்கள் போரை தொடங்குங்கள், அப்போது எங்கள் வீரர்கள் உங்கள் மீது நரகத்தை மழையாக பொழிவார்கள்” என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு பதிலளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா ஈரான் போர் கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் சூழலில், கடல்வழி வர்த்தகத்தில் இடையூறு ஏற்பட்டு மசகு எண்ணெய் விலையானது உலகளவில் அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா தனது இராணுவ படைகளை நிறுத்தி, அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஒரு மணிநேரத்தில் அழிப்போம்
ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டுமானால், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடவேண்டும் என்றும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று (08) செய்தியாளர்களிடம் பேசுகையில், தேவைப்பட்டால் தாக்குதல்களை தொடர தயாராக இருப்பதாகவும், ஹோர்முஸ் நீரிணையில் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் எச்சரித்தார்.
ஈரானில் உள்ள 38 நிலைகள் மீது தாக்குதலை நடத்த தயாராக இருப்பதாகவும், சொல்லப்போனால் ஒரு மணி நேரத்தில் அதனை முழுவதுமான அழித்துவிட முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகையில், “நீங்கள் போரை தொடங்குங்கள், அப்போது எங்கள் வீரர்கள் உங்கள் மீது நரகத்தை மழையாக பொழிவார்கள்” என பதிலளித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |