கொழும்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞன் கடத்தப்பட்டாரா ..!
Missing Persons
Colombo
SL Protest
By Sumithiran
போராட்டத்தில் பங்கேற்ற இளைஞன்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளரும், ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவருமான அந்தோனி வெரங்க புஷ்பிகா என்வரே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அந்தோணி வெரங்க பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்றும் கூறப்படுகிறது.
பேருந்தில் ஏறிய போதே சம்பவம்
குறித்த இளைஞன் கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு திரும்புவதற்காக பேருந்தில் ஏறிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை நேற்றையதினம் டுபாய் செல்வதற்காக விமானத்தில் ஏறிய இளைஞன் ஒருவரும் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்