நைஜீரியாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள் விடுவிப்பு
கடந்த 07 ஆம் திகதி நைஜீரியாவின் வடமேற்கு நகரமான குரிகாவில் கடத்தப்பட்ட 280க்கும் மேற்பட்ட மாணவர்கள் "பாதிக்கப்படாமல்" விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக கதுனா மாநில ஆளுநர் இன்று தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி விடுதலை
கரிஜா நகரில் இருந்து கடத்தப்பட்ட 287 மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி விடுதலை செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்ட நைஜீரிய அதிபருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஆளுநர் உபா சானி தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடத்தல் சம்பவங்கள் அரசுக்கு பெரும் தலைவலி
2014-ம் ஆண்டில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. சமீப காலமாக நாட்டின் வடமேற்கு பகுதி மற்றும் மத்திய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக்குழுவினர் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
பணத்திற்காக கிராம மக்கள் மற்றும் பயணிகளை கடத்திச் சென்று மிரட்டுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |