ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர்துறந்த ஈகைத்தமிழன் அப்துல் ரவூப்கின் 28 வது நினைவு தினம் இன்று(காணொளி)
“என்னை காப்பாற்றாதீர்கள் ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் “ என்ற தீரம் மிக்க வார்த்தைகளோடு இன்றைக்கு 28 ஆண்டுகளுக்கு முன் 1995 ம் ஆண்டு தமிழக மண்ணில் ஒரு உன்னத உயிர் தீயின் பசித்த நாவிற்கு இரையாகிப்போனது.
அதுதான் ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் ஈழத்தமிழர்களின் வாழ்வென்பது நாளுக்கு நாள் நினைவுகளின் கனதியோடு தமக்காக தங்களை தியாகித்தவர்களை நினைவேந்துவதிலையே வருத்தத்தின் முக்கால்வாசி நாட்கள் நகர்ந்து போகிறது.
அந்த அளவிற்கு ஈழப்போராட்டமும் அதன் மீதான ஓர்மத்தோடு போராடிய இனத்தின் இழப்புகளும் மிகப்புனிதமானவை .
அப்படியான ஒரு புனிதமான இழப்பாகவே ரவூப் அவர்களின் மரணமும் நிகழ்ந்து முடிகிறது மரணம் என்பது ஒருமகத்தான பயணத்தின் முடிவு அது வரலாற்றின் ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பதியப்பெற்றதாகவே இருக்கும்.
ஈழத்தமிழர்களின் விதி
அன்றும் ஈழத்தமிழர்களின் மீது சிறி லங்காவின் சிங்கள அரசும் அதன் இராணுவமும் நிகழ்த்திய கொடூரமான போரின் அகோரதாண்டவத்தில் சிக்கி இலச்சக்கணக்கான யாழ்ப்பாணத்தமிழர்கள் இடம்பெயர்ந்து அகதிகளாய் இடம்பெயர்ந்து வீதியோரங்களில் விலங்குகளைப்போல படுத்து கொத்துக்கொத்தாக கந்தக்க்குண்டுகளுக்கு இரையாகிக்கொண்டிருந்த காலம்.
[XIU41X[
இதை ஈழத்தமிழர்களின் விதி என்றும் கடந்து போகமுடியாமல் அதை தீர்ப்பதற்கான விந்தை மருந்தறியாமலும் தவித்த ஆயிரமாயிரம் தொப்புள்கொடி உறவுகளில் அந்த 24 வயது இளைஞனும் ஒருவன் நிலத்தாசை பிடித்தும் அதிகாரமோகம் தலைக்கேறிப்போனதாலும் இன்று சமாதானம் பேசும் அன்று சமாதானப்புறாவாய் வந்து ஈழத்தமிழர்களுக்கு சாத்தானாய் மாறி தன் படை நகர்வுகளை நிகழ்த்திய சந்திரிக்காவின் சிங்கள அரசின் அடாவடிகளையும் சொந்த மண்ணில் ஈழத்தமிழர்கள் அகதியாய் அலைவதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தன்னை தியாகித்துக்கொண்டான்.
வரலாறு மிக நெடியது அந்த வரலாற்றில் தியாகத்திற்கான இடம் என்பதும் ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது.
அந்த தியாகத்தின் ஒருவடிவமாக அவன் தன்னை மாய்த்துக்கொண்டாண் ஈழத்தில் தமிழர்களை கொன்றொழித்த சிங்களத்தின் கிறிக்கற் அணி தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் விளையாட தயாராகிக்கொண்டிருந்தது மறுபுறம் அவலம் அவலம் என்று அங்கு ஈழத்தமிழர்கள் அழுதுகொண்டிருந்தார்கள்.
1995 ம் ஆண்டு 12 வது மாதத்தின் 15 வது நாள் காலைவேளை புலந்தத்தும் தான் பணியாற்றிக்கொண்டிருந்த லண்டனை தளமாக கொண்ட கணிணி நிறுவனத்தின் அறையொன்றில் தான் வாங்கி தயாராக வைத்திருந்த எண்ணெய்யை தன் உடல் முழுவதும் ஊற்றுக்கொண்டு அருகிலே இருக்ககூடிய காமராசர் வளைவுக்கு ஓடிவந்தான் அங்கு தன் உடலில் தீமூட்டிக்கொண்டான்.
அருகில் நின்றவர்கள் ரவூப்பை காப்பாற்ற ஓடோடிவந்த வேளை “ என்னை காப்பாற்றாதீர்கள் ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் “ என்ற வேண்டுகோளோடு தன் தாய் மண்மீது சாய்ந்தான் நம் தாயகமண்ணிற்காவும் மக்களுக்காவும் அவன் கொண்ட அக்கறையின் நிமித்தமாக உடல் கருகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரவூப்பிடம் வாக்குமூலம் பெற வந்த காவல்துறை” தம்பி நீ எந்த கட்சியப்பா “ என்று வினவினார்கள்.
ஈழத்தமிழருக்காகவே தீக்குளித்தேன்
அதற்கு கட்சிகளின் பெயரைச்சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள் நான் ஈழத்தமிழருக்காகவே தீக்குளித்தேன் என்றார்.
அப்துல் ரவூப் தொமர்பாக இணைத்தளம் ஒன்று இவ்வாறு பதிவுசெய்திருந்தது “அப்துல் ரவூப் நாகப்பட்டினம் ஐ.ஐ.டி.யில் சுருக்கெழுத்தர் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஒருநாள் காணாமல் போனான்.
பரிதவித்து வந்த தந்தையார் அசன் முகம்மதுக்கு மும்பையில் உள்ள “கொலாபா” பகுதியில் இருப்பதாக தகவல் வந்தது. சமாதானம் பேசி ஒருவழியாய் அசன்முகமது தனது மகனை தமிழகத்திற்கு அழைத்து வந்தார். அப்போது தந்தையிடம் அப்துல் ரவூப் பின்வருமாறு கூறினார்:
” நான் பிரபாகரன் அணியில சேர்ந்து போராடறதுக்காகப் போனேன். என் இலட்சியத்தை வீணடித்து விட்டீர்களே? ” அவன் சொன்ன பதில் தந்தையை திகைக்க வைத்தது.
அப்துல் ரவூப்பிற்கு ஈழ விடுதலை உணர்வு நெஞ்சில் கணன்று கொண்டிருப்பதை புரிந்து கொண்டார். சாவின் விளிம்பிலும் கூட அப்துல் ரவூப்பின் கண்ணில் ஈரம் கசிய வில்லை என்பதை பல பேட்டிகளில் வெளிப்படுத்தினார்.
அப்துல் ரவூப் ஈழ விடுதலை மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தீராப் பற்றுக் கொண்டதை பாராட்டும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சுப் பணியகம் விடுத்த அறிக்கை பின் வருமாறு: “கலந்திருக்கும் சுவாசக் காற்றில் நஞ்சைத் தூவக் காத்திருப்பவைகள் யாவும் சத்தின்றி சருகாகப் போகும் என்பதைத் தான் அப்துல் ரவூப்பின் தியாகம் எடுத்துரைக்கிறது”
ஈழத்தமிழர்களாகிய நாம் நிம்மதியாக வாழவேண்டும் அதேநேரம் நமக்கெதிராக கொடூரங்களை புரிந்துகொண்டுருந்த சிறிலங்கா அரசைக்கண்டிக்கவேண்டும் என்ற எண்ணத்திற்காக தன்னை தீயின் பசித்தா நாக்குகளுக்கு இரையாக்கிக்கொண்ட தியாகத்தின் அதி உன்னதமான வடிவமான அப்பதுல் ரவூப்பை இன்றைய நினைவுநாளில் கனதியான நினைவுகளோடும் நன்றியுணர்வுடனும் நினைவேந்துகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |