மொட்டுக்கட்சியின் வேட்பாளர்! மகிந்தவின் தீர்மானத்தில் திடீர் மாற்றம்
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka
By pavan
எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராகப் போட்டியிடுவார் என கூறுகிறீர்களா என மகிந்தவிடம் வினவப்பட்டபோது அதற்கு அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் என மகிந்த பதிலளித்துள்ளார்.
மகிந்த கட்சியின் வேட்பாளர்
அப்படி என்றால் உங்களுடைய வேட்பாளர் யார் என மகிந்தவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை, ஒருவேளை எங்கள் கட்சியில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவும் கூடும் நிறுத்தப்படாமலும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்