சஹ்ரானுக்கு கட்டளையிட்ட அபூஹிந்த் யார் : வெடித்தது புதிய சர்ச்சை
சஹ்ரானுக்கு கட்டளையிடுபவராக அபுஹிந்த் என்பவர் இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.எனவே அவர் தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சஹ்ரானின் மனைவி வெளியிட்ட தகவல்
ஹாதியா, சஹ்ரானின் மனைவி. சஹ்ரானுக்கு எப்போதும் காணொளிகளை அனுப்பும் ஒருவர் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது மாற்றுப்பெயர் அபு ஹிந்த். அவர் பேசும் போது ஹாதியாவை சஹ்ரான் விரட்டி விடுவாராம்.
குறிப்பாக வவுணதீவு காவல்துறை அதிகாரிகளின் மரணத்தில் தொடர்புடைய கபூர் மாமா என்ற கடும்போக்குவாதி சொல்கிறான் ஏப்ரல் 16 அன்று மேலிடத்தில் இருந்து சஹ்ரானுக்கு அறிவுறுத்தல் வந்ததாம் அந்த அறிவுறுத்தல்களின்படி, இந்த தாக்குதல் விரைவுபடுத்துமாறு இல்ஹாம் என்ற பயங்கரவாதி கூறுகின்றார்.
கோட்டாபயவிடம் எதிர்பார்த்த நீதி
யார் இந்த அபு ஹிந்த் ? , 2019 ஏப்ரல் 21 முதல் இன்று வரை அனைவரும் விசாரிக்கின்றனர். அப்போது இந்த கோட்டாபய ராஜபக்ச நீதியை நிலைநாட்டுவார் என தெரிவித்தனர். அதனால்தான் இந்த சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இன்றும் இந்த அபு ஹிந்தை அவர்கள் தேடவில்லை.
சரத் வீரசேகர வெளியிட்ட தகவல்
சஹ்ரானுக்கு மேலே ஒரு சூத்திரதாரி இருந்தார். அந்த நபரின் புனைபெயர் அபு ஹிந்த். இந்த அபு ஹிந்தை அடையாளம் காண வேண்டும்.
நவுபர் மௌலவி என்ற சூத்திரதாரி இருப்பதாக.சரத் வீரசேகர கூறினார்..சரத் வீரசேகர கூறும் நவுபர் மௌலவி அதிபர் ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்படவில்லை அல்லது விசாரிக்கப்படவில்லை. யாரை ஏமாற்றுகிறீர்கள்? அபு ஹிந்தை தேடுங்கள் என்று சொல்கிறேன் என தெரிவித்தார்.