சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்
சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரை பிணையில் அனுப்பி அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 100,000 ரூபா ரொக்கப் பிணையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிணை நிபந்தனைகள் மீறப்பட்டாலோ அல்லது சாட்சிகளுக்கு செல்வாக்கு செலுத்த ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலோ பிணை உத்தரவு ரத்து செய்யப்படும் என நீதவான் மேலும் எச்சரித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை
அத்துடன், சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமரதன தேரர், நேற்று(21) பிற்பகல் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
முன்னதாக கம்பஹா பிராந்திய காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினரால் கைது செய்யப்பட்ட அவர், இன்று(22) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, அவர் அனுராதபுரம் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |