பதின்ம வயது சிறுவன் வன்புணர்வு -குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறை
Sri Lanka Magistrate Court
Sexual harassment
By Sumithiran
16 வயதுக்குட்பட்ட சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்தமை உட்பட மூன்று குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரதிவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.
அதுமட்டுமின்றி குற்றவாளிக்கு ரூ.75,000 அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 150,000 ரூபா நட்டஈடு வழங்குமாறும், நட்டஈடு மற்றும் அபராதம் செலுத்தாவிடின் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் சுலைமான் முகமது யாசிர், திறந்த நீதிமன்றத்தின் முன் நீதிமன்றம் விதித்த தண்டனையை வாசித்தார். சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தமிதினி டி சில்வா இந்த முறைப்பாடுகளை கையாண்டார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி