பொன்சேகாவுடன் இணைந்து அமைச்சு பதவி - முற்றாக மறுக்கிறார் சஜித் அணி எம்.பி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு முனைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்திக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி சில்வா, இந்த வதந்தியில் தம்மைப் பற்றிய குறிப்பை 100% மறுப்பதாக தெரிவித்தார். ஊகிக்கப்படும் நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினருடனும் தாம் கலந்துரையாடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1/2: I deny 100% reference to me in this @TimesOnlineLK rumour. I have NOT had any discussions w any member of Government on the speculated position. I have continuously argued for an interim all (or multi) party Gov to rescue #SriLanka from this crisis @GotabayaR put us in to. pic.twitter.com/gA7Z8FbHDB
— Harsha de Silva (@HarshadeSilvaMP) July 27, 2022
"கோட்டாபய ஆர் எங்களை இந்த நெருக்கடியிலிருந்து #இலங்கையை மீட்டெடுக்க இடைக்கால அனைத்து (அல்லது பல) கட்சி அரசாங்கத்திற்காக நான் தொடர்ந்து வாதிட்டேன்," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்குத் தேவையான மிகக் கடுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்துக் கட்சி அல்லது பல கட்சிகளைக் கொண்ட அரசாங்கம் இன்றியமையாதது என்பது தனது கருத்தாகும் என அவர் குறிப்பிட்டார்.
2/2: It is my view that an all (or multi) party government is essential to carry out the extremely tough reforms that are needed to deal w #SriLankaEconomicCrisis. For that all party leaders must pause politics for 9-12 months and agree to the Common Minimum Program we prepared.
— Harsha de Silva (@HarshadeSilvaMP) July 27, 2022
"அதற்கு, அனைத்துக் கட்சித் தலைவர்களும் 9-12 மாதங்களுக்கு அரசியலை நிறுத்திவிட்டு, நாங்கள் தயாரித்த குறைந்தபட்ச பொதுத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
