தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக குறைப்பு : வெளியான சுற்றறிக்கை
இலங்கையில் தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Venerable Muruththettuwe Ananda Thero) தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஓய்வூதிய வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும் மோசமடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார அமைச்சு மனு தாக்கல்
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக நீடித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுகாதார அமைச்சு (Ministry of Health) உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதன்படி, குறித்த வழக்கு முடியும் வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி உத்தரவிட்டது.
அந்த உத்தரவின்படி, 60 வயதை நிறைவு செய்த அனைத்து தாதியர் அதிகாரிகளும் ஓய்வு பெற வேண்டும் என்று சுகாதார அமைச்சின் செயலாளரால் கடந்த 4 ஆம் திகதி சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
