நுவரெலியாவில் 70 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து பயங்கர விபத்து - 14 பேர் படுகாயம்!
Nuwara Eliya
Accident
By Pakirathan
மரக்கறி ஏற்றச் சென்ற பாரவூர்தியொன்று நுவரெலியா, கொண்டக்கலை பகுதியில் பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதுடன், அதில் பயணித்தவர்கள் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் 14 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை
காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஐந்து பேர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி