வடக்கு இத்தாலியில் கோர விபத்து! 14 பேர் பலி
accident
death
italy
By Vanan
வடக்கு இத்தாலியின் மாகியோர் ஏரிக்கு அருகே ஒரு மலையில் கேபிள் கார் விழுந்ததில் சிறுவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரிசார்ட் நகரமான ஸ்ட்ரெசாவிலிருந்து பீட்மாண்ட் பிராந்தியத்தில் அருகிலுள்ள மொட்டரோன் மலை வரை பயணிகளை ஏற்றிச் செல்லும் சேவையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இறந்தவர்களில் ஐவர் இஸ்ரேலிய பிரஜைகளும் அடங்குவதாக இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐந்து மற்றும் ஒன்பது வயதுடைய சிறுவர்கள் விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்