ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்!
மொராக்கோ பெருநிலப்பரப்பில் உள்ள ஸ்பெயினின் வட ஆபிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் 24 மணிநேரத்துக்குள் 49,000 மொரோக்கர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (31) காலை வரை மக்கள் அங்கு சென்றுவருவதால் ஏறபட்ட நெருக்கடியை அடுத்து ஸ்பெயினின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் இன்று செவுட்டா பகுதிக்கு அவசரமாக சென்றுள்ளனர்.
ஸ்பெயின் பெருநிலப்பரப்பில் இல்லாமல் மொராக்கோவின் கடற்கரையில் செவுட்டா இருந்தாலும் பகுதிக்குள் நுழைந்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதற்கு நிகர் என்பதால் 24 மணிநேரத்துக்குள் அலை அலையாக 49,000 மொரோக்கர்கள் அங்கு நுழைந்துள்ளனர்.
18 பேர் பலியாகியுள்ளனர்
ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் நீந்தியும், காற்றடைக்கப்பட்ட சாதனங்களை பயன்படுத்தியும் நுழைந்துள்ள நிலையில் கடலில் நீந்த முற்பட்டவர்களில் 9 பேர் உட்பட 18 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொராக்கோவில் உள்ள செவுட்டா அல்லது மெலிலாவை அடைய முயற்சிக்கும் குடியேறிகளை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என ஸ்பெயின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை சாதகமாக கருதி இந்த நெருக்கடி உருவாக்கியுள்ளதாக கருதபபடுகிறது.
தற்போது அங்கு ஸ்பெயின் இராணுவத்தை அனுப்பவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் இந்த நெருக்கடியை அடுதத்து ஸ்பெயின் எல்லையில் கட்டுப்பாடுகளை இறுக்க தனது விரைவுத் தலையீட்டு எல்லைப் படையை பிரான்ஸ் களமிறக்கியுள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பு
ஆயிரக்கணக்கான மொரோக்கர்கள் நுழைந்ததால் 24 மணிநேரத்தில் செவுட்டாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.

நேற்று முதல், பலர் செவுட்டாவின் தெருக்களில் அலைந்து திரிந்து வருகின்றனர், அவர்களில் பலர் இரவை திறந்தவெளியில் கழித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் ஷெங்கன் வலயத்தில் இருந்து ஸ்பெயின் வெளியேற வேண்டும் என்ற இத்தாலியின் கருத்தை ஸ்பெயின் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |