கிளிநொச்சியில் காரில் சென்ற குடும்பத்தை மோதிய தொடருந்து - 17 வயது சிறுமி பலி - இரு சிறுவர்கள் படுகாயம்
கிளிநொச்சி - அறிவியல் நகர் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தில் 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த தொடருந்து, அறிவியல் நகர் தொடருந்துநிலையத்துக்கு அண்மையிலுள்ள கடவையில் சிறிய ரக கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த காரில் தந்தை, தாய், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பயணித்துள்ளனர்.
நேபாளத்தை புரட்டிப் போட்ட வெள்ளம்: ஈஷா சேர்ந்த 77 பேரைக் காணவில்லை - சத்குரு வெளியிட்ட பயங்கர காணொளி
விசாரணை
தொடருந்து காருடன் மோதியதில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், 16 வயதுடைய சிறுவனும் 9 வயதுடைய சிறுமியும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சமிக்ஞை முறையாக இயங்கவில்லை
இதேவேளை, குறித்த தொடருந்து கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் முறையாக இயங்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் குறித்த தொடருந்து கடவையின் சமிக்ஞை முறையாக இயங்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடருந்து கடவையின் சமிக்ஞை அமைப்பு தொடர்பில் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் கவலை நிலவியதாகவும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |