ரஷ்ய நாட்டவரால் ஏற்பட்ட விபத்து - தூக்கி வீசப்பட்ட உழவு இயந்திரம்
காலி - மாத்தறை பிரதான வீதியில் கம்புருகமுவ குளத்திற்கு அருகில் ரஷ்ய இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்ற உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளும் உழவு இயந்திரமும் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாக செலுத்தப்பட்டதுடன், உழவு இயந்திரத்தை பக்கவாட்டு வீதியிலிருந்து காலி - மாத்தறை பிரதான வீதியை நோக்கி செலுத்தும் போது மோட்டார் சைக்கிள் அதன் முன்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
தூக்கி வீசப்பட்ட உழவு இயந்திரம்
மோட்டார் சைக்கிளின் வேகம் காரணமாக உழவு இயந்திரம் கழன்று சுமார் மூன்று மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் ரஷ்யர் சிறிய காயம் அடைந்தார். அவருக்கு இந்த நாட்டிலோ அல்லது அந்த நாட்டிலோ செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்துக்களில் சிக்கும் பலர்
இந்த நாட்களில் வெலிகம - மிரிஸ்ஸ பிரதேசங்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், முறையான சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது முறையான சாரதி பயிற்சி இல்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களாக பலர் விபத்துக்களில் சிக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்ய இளைஞர் கைது
விபத்து தொடர்பில் கொட்வில காவல்துறையினர் ரஷ்ய இளைஞரை காவலில் எடுத்துள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்வில காவல்துறை போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
