அதிகாலையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்
திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் இன்று (29) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த கார், சாரதிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் தூக்கக் கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் இறக்கக்கண்டி – நாளாம் வட்டாரம், வாளையூற்று பகுதியைச் சேர்ந்த 29 வயதான என். நிஜாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி (25), ஐந்து வயது மகன் மற்றும் 19 வயது சகோதரர் ஆகியோர் காயமடைந்து முதலில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |