சாவகச்சேரியில் தென்னங் கோம்பைகளை ஏற்றி வந்த பட்டா ரக வாகனம் விபத்து!
Sri Lanka Police
Jaffna
By Laksi
சாவகச்சேரி, நுணாவில் A9 வீதியில் தென்னங் கோம்பைகளை ஏற்றி வந்த "பட்டா வாகனம்" ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நுணாவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் சாவகச்சேரியிலிருந்து தென்னங்கோம்பைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி