யாழில் கோர விபத்து : இளைஞன் பலி! மற்றொருவர் படுகாயம்
புதிய இணைப்பு
யாழ் - ஆவரங்கால் பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்றவேளை மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்
இந்த விபத்தில் 32 வயதான உதயநாதன் விதுசன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இரு இளைஞர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று (22) மாலை யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் மீது மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது.
பலத்த காயங்கள்
இந்த சம்பவத்தில் நடந்து சென்றவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கை, கால், முறிவடைந்த நிலையிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த இருவரும் வீதியால் சென்றவர்களினால் காப்பாற்றப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக சிகிச்சை
அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விதுஷன் (வயது 32) என்ற மாடுகளைக் கூட்டிச் சென்ற இளைஞனும், தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நெல்லியடி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன் (வயது 23) என்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநருமே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்த இருவரும் தற்போது உயிருக்கு போராடி வருவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |