கிளிநொச்சியில் கோர விபத்து - குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி
Kilinochchi
Sri Lanka Police Investigation
Accident
Death
By Sumithiran
கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - பரந்தன் முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை சந்திக்கருகில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த கதிரவேலு யாதவராசா என்ற 58 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.
கிளிநொச்சி காவல்துறை விசாரணை
புளியம்பொக்கணை பகுதியில் இருந்து கண்டாவளை நோக்கி துவிச்சக்கரவண்டியில் பயணித்த குடும்பஸ்தர் மீது பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பாரவூர்தி மோதியுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்