மகியங்கனை - கண்டி வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து : 22 பேர் காயம்
Kandy
Sri Lanka
Accident
By Sindu
மகியங்கனை - கண்டி பிரதான வீதியில் பேருந்தொன்று இன்று (29) நண்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அசலக பாலம் சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகிப் புரண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
விசாரணைகள் முன்னெடுப்பு
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மகியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |