நடுவீதியில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து! நுவரெலியாவில் சம்பவம்
நுவரெலியா - கண்டி வீதியில் பாரவூர்தி குடைசாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று (16) நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
மேற்படி பாரவூர்தியானது, நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததாக நுவரெலியா போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
சீரற்ற காலநிலை
நுவரெலியாவில் தொடர்ந்து நிலவுகின்ற சீரற்ற காலநிலையின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் மேலும் கூறியுள்ளார்.
இதன்காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டைமீறி பாரவூர்தி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
குறித்த பாரவூர்தியில் சாரதியும், உதவியாளரும் பயணித்த நிலையில், இருவரும் அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ள நிலையில் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |