நுவரெலியாவிற்கு சென்ற வாகனம் விபத்து: குழந்தை உட்பட இருவர் பலி
Colombo
Kandy
Nuwara Eliya
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sathangani
கண்டி - புஸ்ஸல்லாவ பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
வான் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததனால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புஸ்ஸல்லாவ - ஹெல்பொட பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவர் உயிரிழப்பு
கொழும்பில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றவர்களை ஏற்றிச்சென்ற வான் ஒன்றே திரும்பிவரும் வழியில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 2 வயதுக் குழந்தையும் 70 வயது முதியவரும் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை விபத்தின் போது 10 பேர் வானுக்குள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை கொத்மலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்