வவுனியாவில் ஏ9 வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்! ஒருவர் கைது
வவுனியா - ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏ9 வீதியில் அமைந்துள்ள திறந்த பல்கலைக் கழகம் முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நகரை நோக்கி மோட்டர் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது அதே வழியில் வந்த இரு சொகுசு வாகனங்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய ஒரு கார் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |