வெலிப்பன்னயில் விபத்து : 3 வயது சிறுமி உயிரிழப்பு!
வெலிப்பன்ன காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அளுத்கம - மத்துகம வீதியின் 5 ஆம் கட்டை பகுதியில் நேற்று (25) மாலை இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான சிறுமி தனது தாய் மற்றும் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மத்துகம நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்த் திசையில் இருந்து வந்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
விபத்தில் காயமடைந்த சிறுமி, அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் தர்கா நகர அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிறுமி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில் காயமடைந்த சிறுமியின் தந்தை மற்றும் தாய் மேலதிக சிகிச்சைக்காகத் தற்போது நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தின் பின்னர் கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிப்பன்ன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |